Descriptions
இன்று 29-11-2018 மன்/பதியுதீன் வெள்ளிமலை பாடசாலையின் வெற்றி நாயகர்களாகத் திகழ்ந்த புலமைப் பிரிசில் போட்டிப்பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் Mk றயீசுத்தீன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு முன்னால் வடமாகாண சபை உறுப்பினரும் இப்பாடசாலையின் ஸ்தாபகத் தலைவருமான அலீகான் சரீப், மன்னார் வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் முசலி கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு ஜுனைட் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.