Descriptions
சேமிப்பில் இருந்த படம். |
இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்கள் 2018 ம் ஆண்டுக்கான புதிய மாணவ, மாணவிகளை அனுமதிக்கும் பொருட்டு நேர்முகப் பரீட்சைக்கு அறிவிப்பு விடுத்திருக்கும் இத்தருணத்தில் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கட்டாயம் சிந்திக்க வேண்டிய சில விடயங்களை உங்களுடன் பகிரலாம் என நினைக்கிறேன் அந்த வகையில்...
உங்கள் பிள்ளைகளை சரியான கொள்கைக் கோட்பாடு மற்றும் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படும் மத்ரஸாவில் சேருங்கள், இல்லையேல் ஏழு வருடங்கள் மட்டும் கடந்திருக்கும் ஆனால் பிள்ளைகளோ காலத்தை கழித்த சந்தோசத்தில் வெறும் கையுடன் தான் வீடு திரும்புவார்கள். #நிதர்சனம்
மத்ரஸாவில் பிள்ளைகளை சேர்க்கும் போது அங்கு O/L,
A/L மற்றும் ஏனைய அரசாங்க பரீட்சைகளுக்கு வழிகாட்டப்பட்டு அனுமதியளிக்கப்படுகின்றனவா என்று பார்க்கும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் ஒரு கனம் மத்ரஸாவில் “பாடங்கள் சிறப்பாக நடக்கின்றனவா, கற்பிக்கும் ஆசிரியர்கள் திறைமையுள்ள தகைமை வாய்ந்தவர்களா, பாடங்கள் நடைமுறைக்கு பொருத்தமானவையா, ஒழுக்கம் பண்பாடுகள் போன்றவற்றில் மாணவர்களை நல்ல முறையில் வழிநடாத்துகின்றதா, மாணவர்கள் ஆசிரியர்களின் கண்காணிப்பில் வளர்க்ப்படுகிறார்களா, மாணவர்கள் கற்பிக்கப்படும் பாடங்களை அன்றன்றே மீட்டிப் பார்க்கின்றனரா, அல்லது தவனைப் பரீட்சைகளுக்கு மாத்திரம் பாடங்களை தொடுகிறார்களா, ஆசிரியர்கள் மாணவர்களது முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு அவர்களுக்கு முக்கியத்துவமளித்து பாடங்களை கற்பிக்கின்றனரா” போன்ற இன்னோரன்ன விடயங்களை ஆய்வுசெய்து சரிபார்க்க மறந்துவிடுகின்றனர்.
உங்கள் பிள்ளைகளுக்கு சரியான மத்ரஸாவை தெரிவு செய்வது உங்களது கடமை.
விசாரிக்காது, ஆராயாது, கண்மூடித்தனமாக இன்ன மத்ரஸா நல்லது என்று நம்பி பிள்ளைகளது வாழ்க்கை பாழாகுவதற்கு காரணமாக அமைந்துவிட வேண்டாம்.
நிர்வாகத் திறமை, சிறந்த ஆசிரியர் குழாம், பொருத்தமான ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம், மாணவர் கண்காணிப்பு, திறமைகளை வளர்ப்பதற்காகவும் முன்னேற்றங்களுக்காகவும் மாணவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தல் போன்றவற்றோடு அதிபர், ஆசிரியர், நிர்வாகத்தினர், பெற்றோர் மற்றும் மாணவர்கள் என அனைத்து சாராரும் முழுமையான பங்களிப்புக்களை செய்கின்ற ஓர் மத்ரஸாவை தெரிவு செய்வது மிக மிக அவசியமாகும்.
அஸ்(Z)ஹான் ஹனீபா