Descriptions
- எம்.என். முஹம்மத் -
நேற்று இரவு பாணந்துரையில் நான்கு கடைகள் முற்றாக எரிந்துள்ளது. என்னுடய சகோதரின் கடையும் எரிந்தனால் இன்று அந்தப்பகுதியிற்கு விஜயம் செய்தேன்.
கடைகள் அனைத்தினதும் பிரதான ஆளி(Main switch) திறந்திருந்துள்ள (OFF) நிலையில் மின் ஒழுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக ,மிகக் குறைவானது ,கடையின் நடுவில் இருந்து தீ ஆரம்பித்துள்ளதால் பொலிசார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாடு இப்போது உள்ள நிலையில் யாரும் எந்த வேலையையும் செய்யலாம் .எனவே கடைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும்.சகல தரப்புகளிலும் அவதானம் தேவைப்படுகின்றது .இன்று பானந்துரை பொலிஸ் நிலையத்திற்கும் விஜயம் செய்தேன் அவர்கள் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
பல கடைகள் பல இடங்களில் எரிந்துள்ள நிலையிலும் இன்னமும் சரியான பாதுகாப்பு ஒழுங்கொன்றை வகுத்துக் கொள்ளவில்லை .
யார் மீதும் விரலை நீட்டக்கூடாது ,விசாரணைகள் சரியாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நேற்று இரவு சிங்கள,முஸ்லிம் சகோதர்களும் ,அரச இயந்திரமும் தீயை அனைப்பதற்கு பலத்த முயற்சி எடுத்த போதிலும் ,முஸ்லிம்களிற்கு சொந்தமான கடைகள் நான்கும் குறுகிய நேரத்தில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது .
நாடு ஆபத்தான நிலையில் உள்ளதால் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.