Descriptions
அடிமை விலங்கொடிப்போம்
அடலேறு போல் எழுவோம்
விடிவை எமது மண்ணில்
விரைவினிலே நாம் பெறுவோம்
துடிப்புடனே விரைந்திடவே
தோள் கொடுப்பீர் இளைஞர்களே
படியேறிக் கெஞ்சிடாமல்
பலம் சேர்ப்போம் மக்களுக்காய்!
சிந்தித்து செயற்படுவோம்
சிறப்புரிமை நாம் பெறுவோம்
மந்திரத்தில் மயங்கிடாமல்
மறுபிறவி நாம் எடுப்போம்
விந்தைகளைக் காட்டி
விலை பேசி எம்மரை
எந்நாளும் ஏமாற்றும்
இழிவுதனை நாம் களைவோம்!
ஒற்றுமை பட்டுவிட்டால்
ஒருவராலும் எம்மவரை
வெற்றி கொள்ள முடியாது
விடிவு எமக்கு வரும்
நிர்க்கதியாய் நிற்கின்றோம்
நிம்மதியை இழந்துள்ளோம்
உற்றவரே ஒன்றிணைவீர்
உம் கடமை இதுவென்பேன்!
வழி தவறி செல்லுகின்ற
வண்ணத்துப் பூச்சிகளை
அழியாத செல்வம் நிறை
அழகுபதி எம்மண்ணில்
தெளிவாக நெறிப்படுத்தி
தேர்ந்தெடுக்கப் பெரியோரே
துளியளவும் சுணங்காதீர்
துரிதமுடன் மண் மீட்போம்!
பணப்பொதிகள் பெற்றிடாமல்
பண்புதனை இழந்திடமால்
கணப்பொழுதில் மாறிடாமல்
கயமைதனை அழித்திடுவோம்
உணர்வுள்ள பற்றாளர்
ஒருமித்து மண்ணிற்காய்
இணங்கிக் குரல் கொடுத்தால்
எம் வெற்றி நிட்சயம்தான்!
நன்றி
முசலி அமுதன்
அடலேறு போல் எழுவோம்
விடிவை எமது மண்ணில்
விரைவினிலே நாம் பெறுவோம்
துடிப்புடனே விரைந்திடவே
தோள் கொடுப்பீர் இளைஞர்களே
படியேறிக் கெஞ்சிடாமல்
பலம் சேர்ப்போம் மக்களுக்காய்!
சிந்தித்து செயற்படுவோம்
சிறப்புரிமை நாம் பெறுவோம்
மந்திரத்தில் மயங்கிடாமல்
மறுபிறவி நாம் எடுப்போம்
விந்தைகளைக் காட்டி
விலை பேசி எம்மரை
எந்நாளும் ஏமாற்றும்
இழிவுதனை நாம் களைவோம்!
ஒற்றுமை பட்டுவிட்டால்
ஒருவராலும் எம்மவரை
வெற்றி கொள்ள முடியாது
விடிவு எமக்கு வரும்
நிர்க்கதியாய் நிற்கின்றோம்
நிம்மதியை இழந்துள்ளோம்
உற்றவரே ஒன்றிணைவீர்
உம் கடமை இதுவென்பேன்!
வழி தவறி செல்லுகின்ற
வண்ணத்துப் பூச்சிகளை
அழியாத செல்வம் நிறை
அழகுபதி எம்மண்ணில்
தெளிவாக நெறிப்படுத்தி
தேர்ந்தெடுக்கப் பெரியோரே
துளியளவும் சுணங்காதீர்
துரிதமுடன் மண் மீட்போம்!
பணப்பொதிகள் பெற்றிடாமல்
பண்புதனை இழந்திடமால்
கணப்பொழுதில் மாறிடாமல்
கயமைதனை அழித்திடுவோம்
உணர்வுள்ள பற்றாளர்
ஒருமித்து மண்ணிற்காய்
இணங்கிக் குரல் கொடுத்தால்
எம் வெற்றி நிட்சயம்தான்!
நன்றி
முசலி அமுதன்