இரண்டாம் மொழி சிங்களப்பாடநெறி முசலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
Descriptions
இம்முறை பல்கலைகழகம் நுழையும் மாணவ மாணவியர்கள், இளைஞர்களை சிங்கள மொழியில் வலுவூட்டும் நோக்குடன் முசலி வள நிலையத்தின் கலை, கல்விப்பிரின் முசலி மக்கள் மன்றின் ஏற்பாட்டுடன் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுன் இன்று 20.11.2018 முசலி தேசியப் பாடசாலையில் 12 நாட்கள் கொண்ட சிங்கள மொழிப் பாடநெறி அரச மொழிகள் அமைச்சின் செயலாளர் திரு. எம்.வை.எஸ். தேசப்பிரிய அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவில் இடம்பெறும் இப்பாடநெறியை சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என அரச மொழிகள் அமைச்சின் செயலாளர் திரு. தேசப்பிரிய அவர்கள் தனது விஷேட உரையில் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. என். சீ. மோகன் றாஸ் அவர்களும், முசலி பிரதேச செயலாளர் திரு. கே.எஸ். வஸந்தகுமார் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு கருத்துரைத்தனர்.
மேலும், முசலி தேசிய பாடசாலை அதிபர் திரு. எம் உவைஸ் அவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சிந்துஜா கருத்துரைத்ததோடு நன்றி உரையை முசலி வள நிலைய செயலாளர் திரு. ஏ.கே.எம். சியாத் மேற்கொண்டார். இந்நிகழ்வை திரு. வை.எல். லறீப்பான் ஒருங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.