Descriptions
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2018 டிசெம்பர் 02 ஆம் தகதி பி.ப 3:30 மணியளவில் பாணந்துறை மல்சரா மண்டபத்தில் க.பொ.த. (உ/த) மாணவர்களுக்கான அரசறிவியல் நூலை வெளியிட நூலாசிரியல் பாறுக் பஸ்மிகான் ஏற்பாடு செய்துள்ளார்
களு/ அலவியா மு.ம.வித்தியாலயத்தின் அதிபர் A.J.M. புர்கான் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்.
கௌரவ அதிதிகளாக தொழிலதிபர், முன்னாள் முசலி பிரதேச சபையின் தவிசாளர் அல்ஹாஜ் W.M. எஹியான் பாய் அவர்களும் தற்போதைய முசலி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் அவர்களும் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாரு பாருக் பஸ்மிக்கான் அன்போடு அணைவரையும் அழைக்கின்றார்.