Descriptions
திடீரென
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைத் தொடர்ந்து குறிப்பிட்ட திகதியில் முசலியில் தேசிய
மீலாத் விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை நிறுத்தவேண்டிய நிலைக்கு விழா ஏற்பாட்டுக்
குழு தள்ளப்பட்டுள்ளது.
மேலதிகமாக
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சராக
எம்.எச். எம். பவுசி நியமிக்கப்பட்டதன் பின்னர் வேறு சில ஏற்பாடுகளின் ஊடாக தேசிய மீலாத் நிகழ்வுகளை
கொழும்பில் சிறிய வைபவமாகவேனும் நடாத்தி முடிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டது.
எனினும் சமய
விவகார அமைச்சராக உதய கம்மன் பில நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் தற்போதைய அரசியல்
இறுபறிகளுக்கு மத்தியில் தேசிய மீலாத் விழா நடைபெறுவது சாத்தியமில்லை என்று தெரிய
வருகின்றது.
தேசிய மீலாத்
விழாவினை முன்னிட்டு அபிவிருத்திப் பணிகளும்
பல்வேறு போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்
தக்கது.