Descriptions
பிரதி அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் முசலியில் காணப்படும் கிராமங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவென சுமார் ஒரு கோடி எண்பது இலட்சம் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.
பாதைகள் மற்றும் பாடசாலை கட்டிடங்கள் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதற்கட்டமாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனினும் முசலிப் பிரதேசத்தில் மேற்படி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாகவும்க கூறப்படுகின்றது.
இதனால் சிலபோது இவ்வருட இறுதியில் இந்நிதி பயன்படுத்தாமல் திரும்பிச்செல்லக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலைதெரிவிக்கின்றனர்.
அரசியல் சுயநலத்தை ஒதுக்கிவிட்டு முசலிப் பிரதேச செயலகம் மற்றும் முசலிப் பிரதேச சபை பிரதி அமைச்சரின் 18 மில்லியன் ரூபாய் அபிவிருத்தித் திட்டம் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஊர்மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.