முசலியில் இடம்பெறும் 12 நாள் சிங்கள பாடநெறியை நல்லிணக்க அமைச்சின் செயலாளர் ஆரம்பித்து வைக்கிறார்.
Not allow reviews
Descriptions
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மொழிகள் செயற்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட செயலக நல்லிணக்கம், மொழிகள் பிரிவுடன் இணைந்து முசலி வள நிலையத்தின் கலை கல்விப்பிரிவான முசலி மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் 12 நாட்கள் தொடர்ச்சியாக இம்முறை பல்கலைகழகம் நுழையும் மாணவ மாணவியர், பாடசாலையிலிருந்து விலகிய இளைஞர்களுக்குமான இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறி முசலி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நாளை செவ்வாய் 20.11.2018 காலை 8.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ். தேசப்பிரிய அவர்களால் ஆரம்பித்து வைக்கப்படும் இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு. ஸீ. ஏ. மோகன் றாஸ் அவர்களும் முசலிப் பிரதேச செயலாளர் எஸ் வஸந்தகுமார் அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.
பயிற்சி நிறைவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படும்.
இவ்வகுப்பில் பங்குகொள்ள விரும்புபவர்கள் பின்வரும் இலக்கத்திற்கு தங்களது பெயர் மற்றும் தகைமை என்பவற்றை குறிப்பிட்டு குறுஞ்செய்தி மூலம் பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தொடர்பு இல:0705718122
செயலாளர்
முசலி வள நிலையம்.
முசலி வள நிலையம்.