Descriptions
தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1500 ஆக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்திவருவதாக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகள் பிரிவின் பணிப்பாளர் ஜயந்த விக்கரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சரின் பணிப்புரைக்கமைய தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான தகவல்களைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவூம் அவர் தெரிவித்தார்.
பல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளன. அவை மாகாண சபைகளினதும் மாகாண ஆளுனரினதும் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும்; தேசிய பாடசாலைகளின் தற்போதைய எண்ணிக்கை 353 என்பது குறிப்பிடத்தக்கது.