தொண்டர் ஆசிரியர்களை நிரந்த சேவையில் இணைத்துக் கொள்ளாமைக்கு கண்டனம்.
Not allow reviews
Descriptions
வடமாகாணப் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களை நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படும் நியமனங்கள் தாமதடைவது குறித்து இலங்கை ஆசியர் சேவை சங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அதன் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வடமாகாண தொண்டர் ஆசிரியர்களில் அடிப்படைத் தகுதிகளைப் பெற்றுள்ளவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்ட 182 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். எனினும் தெரிவுகள் நடைபெற்று 3 மாத காலம் கடந்த பின்னரும் நியமனம் வழங்க கல்வி அமைச்சு இன்னமும் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
வடமாகாணத்தில் நிலவூம் தீவிர ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு இவ்வாறான நியமனங்களை துரிதப்படுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.