Descriptions
ஆசிரியர் உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் இருவருட பயிற்சி சான்றிதடைப் பெற்றதன் பின்னரே ஆசிரிய சேவையின் படித்தரங்களுக்குள் இணைத்துக் கொள்ளப்படுவர் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவத்தார்.
பாராளுமன்றில் கடந்த வியாளக்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்கட்சியின் பிரதம கொறடாவூமான அனுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர் உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் இரண்டு வருட பயிற்சிச் சான்றிதழைப் பெற்றதன் பின்னரே ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர். இவர்கள் பயி;ற்சியை முடித்ததன் பின்னர் 3.2.1 என்ற படித்தரங்களுக்கு அமைவான சம்பளத்திற்குள் உள்வாங்கப்படுவர்.
இவர்களுக்கான கொடுப்பனவை 6000 இலிருந்து 10000 ஆக இந்த அரசாங்கம் அதிகரித்துள்ளது. பயிற்சிகளை முடித்த தமிழ் மொழி மூலமான 1629 ஆசிரியர்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 744 பேர் பயிற்சி முடித்ததன் பின்னர் உள்வாங்கப்படவூள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.