தேசிய பாடசாலை பட்டதாரி ஆசிரியர் நியமனமும் திசைமுகப்படுத்தல் பயிற்சியும்
Not allow reviews
Descriptions
தேசிய பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளுவதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வூ கடந்த 8 ஆம் திகதி அபேகம வளாகத்தில் அமைச்சர் அகில விராஜ்காரியவகம், மற்றும் ராஜாங்க அமைச்சர். வீ. ராதாகிரிஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் நியமனங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கான திசைமுகப்படுத்தல் வேலைத்திட்டம் எதிர்வரும் 11.12.2017 அன்று தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆரம்பமாகவூள்ளது. இது 2017.12.31 ஆம் திகதிவரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திசைமுகப்படுத்தல் வேலைத்திட்டத்தில் கலந்துகொள்ளுதல் ஆசிரியருடைய முதல் நியமனத் திகதியாகக் கணிப்பிடப்படும். எனவே நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தாமதிக்காமல் இந்த திசைமுகப்படுத்தல் வேலைதிட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசவம் முதலான காரணங்களால் திசைமுகப்படுத்தலில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தி அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வமாறு வேண்டப்படுகின்றனர்.