Descriptions
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 12 ஆம் திகதி ஆரம்பமாகஉள்ளன. பரீட்சை மேசடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு வழிமுறைகளில் செயற்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை மோசடியில் ஒருவர் ஈடுபட்டார் என நிரூபனம் ஆனால் 5 வருட சிறை வழங்கப்படுவதோடு அவரது பரீட்சைப் பெறுபேறுகள் ரத்துச் செய்யப்பட்டு எதிர்காலத்தில் எந்தப் பரீட்சையூம் எழுத முடியாது தடைவிதிக்கப்படும்.
பரீட்சாரத்திகளுக்கு இடையூ+று ஏற்படின் 0112784208இ 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேசிய ரீதியில் 633573 மாணவர்கள் தோற்றவூள்ளனர். புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 3762 பரீட்சை நிலையங்களும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 1354 பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.