கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளைச் செலுத்துக - ஸ்டாலின் கோரிக்கை
Not allow reviews
Descriptions
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் அதற்கான சம்பள நிலுவைகளை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஏ.நிசாம் மற்றும் மாகாண உதவிக் கல்விச் செயலாளர் எஸ். தெய்வேந்திரம் ஆகியோரை சந்தித்து இது தொடர்பான வேண்டுகோளை விடுத்திருந்தார்.
2014.10.23 ம் திகதிய வர்த்தமாணி மூலம் ஆசிரியர்களின் பதவியுயர்வு மற்றும் சம்பள நிலுவை வழங்குதல் பற்றி அரசாங்கம் அறித்திருந்தது. எனினும் மூன்று வருடங்கள் கடந்த பின்னரும் இந்த பதவி உயர்வுகள் மற்றும் அதற்கான சம்பள நிலுவைகளை இன்னும் வழங்கப்படவில்லை. அண்மையில் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முழுமையாக அது வழங்கப்படவில்லை.
எனவே, இது தொடர்பாக உடனடியாகக் கவனம் செலுத்துமாறு கிழக்கு மாகாணக் கல்வி அதிகாரிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.