Descriptions
ஏ.எல். நவ்பர் அவர்கள் எழுதிய இறக்காமம் கல்வியும் அரசியலும் எனும் நூலின் வௌியீட்டு விழா இன்று மாலை இறக்காமம் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ஏ.எல். நவ்பர் அவர்களின் மூன்றாவது வௌியீடான இந்நூல் இறக்காமம் பிரதேசத்தின் கல்வி மற்றும் அரசியல் தொடர்பான தரவுகளோடு ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூலின் ஆய்வுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் வழங்கவுள்ளார்.
நூல் விமர்சன உரையை சிராஜ் மஷ்ஹூர் அவர்களும் கருப் பொருள் உரையை றவுப் செய்ன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.