Descriptions
க.பொ.த சாதார தரப் பரீட்சைக்கான பாடங்களை ஆறு பாடங்களாக மட்டுப்பத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கடந்த 7 ஆம் திகதி அனுல வித்தியாலயத்தில் நடைபெற்ற தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதித் தினத்தை முன்னிட்டு நுகேகொட அனுல வித்தியாலயத்தில் நடைபெற்ற தேசிய வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதான பாடங்களுக்கு மேலதிகமாக உள்ள பாடங்கள் செயன்முறை மற்றும் மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறைகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு கலைத்திட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாகவூம் அவர் இதன் போது தெரிவித்தார்.