Descriptions
அரச சேவையின் முகாமைத்துவ உதவியாளர் சேவை மற்றும் நாடளாவிய சேவைகள் ஆகியவற்றின் வருடாந்த இடமாற்றங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திதிக்கு அல்லது அதற்கு பின்னர் வரை பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், அரச சேவை ஆணைக்குழுவின் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் முதலானோருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் உள்ளுர் அதிகார சபைகள் பலவற்றிக்கு தேர்தல்கள் 2018 ஜனவரி மாதமளவில் நடைபெற உள்ளதால் அனைத்து இடமாற்றங்களையும் பிற்போடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் கடமைகளை ஒழுங்குபடுத்துவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இடமாற்றங்களை பிற்போடுமாறு அவ்வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.