Descriptions
மேலும் 15000 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியசவம் தெரிவித்தார்.
தேசிய பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் கடந்த 8 ஆம் திகதி அபேகம வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் எதிர்வரும் சில மாதங்களில் சுமார் 10000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவள்ளதாகத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் கீழ் நிலவம் அனைத்து பெற்றிடங்களையூம் நிரப்புவதற்கு உரிய காலத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இலங்கையில் கல்வி வளர்ச்சியின் முக்கியமானதொரு நிகழ்வாகும். ஆனால் இந்த நியமனங்கள் எதிலும் அரசியல் கலப்பில்லாமல் சுயாதீனமாக மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் போது உயர் தர வகுப்புகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், தகவல் தொழிநுட்பம் மற்றும் ஏனைய பாடங்கள் உள்ளடங்கிய 1288 நியமனங்களை கல்வி அமைச்சர் வழங்கி வைத்தார்.