கல்விக் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கான நியமனக் குழப்பங்களைத் தீர்ப்பதற்க்கு உடன்பாடு
Not allow reviews
Descriptions
கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியாகிய 2014-2016 கற்கையாண்டைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனங்களில் காணப்படும் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்கு புதிய திட்டமொன்றைத் தயாரிப்பதற்குக கல்வி அமைச்சின் செயலாளர் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் கடந்த 14 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளோடு நடாத்திய பேச்சுவார்த்தையில் இந்த இணக்கப்பாட்டைத் தெரிவித்த்தாக சங்கத்தின் செயலாளர் திரு மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
விசேடமாக தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் மேன் முறையீடுகளுக்கும் தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற சபையினூடாக அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கும், மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவினூடாக குறித்த மாகாணத்தின் கல்வி அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல்களின் ஊடாக இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் கல்வி அமைச்சின் செயலாளர் இணக்கம்தெரிவித்துள்ளதாகவும் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இதற்கேற்ப இம்முறை கல்விக் கல்லூரி நியமனம்பெற்ற ஆசிரியர்களில் தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றவர்கள் கல்வி அமைச்சின் செயலாளர்க்கும் மாகாணப் பாடசாலைகளில் நியமனம் பெற்றவர்கள் மாகாணக் கல்விச் செயலாளர்க்கும் அனுப்பியுள்ள கடிதங்களின் பிரதிகளை தமது சங்கதின் தலைமைக் காரியாலயத்திற்கு மிக விரைவில் வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இம்முறை நியமனம் பெற்றவர்களில் 90 வீதமானோர் பெண்களாவர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தமது நிரந்தர வதிவிடத்திற்கும் நியமனம் பெற்றுள்ள பாடசாகைகும் இடையிலான தூரம் மற்றும் நிரந்தர வதிவிட மாவட்டத்தில் தற்போது குறித்த பாடத்திற்கு காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பாகவும் தற்போது நியமனம் பெற்றுள்ள பாடசாலையில் காணப்படும் மேலதிக ஆசிரியர்கள் தொடர்பாகவும் குறித்த மேன் முறையீட்டில் குறிப்பிடுமாறும் இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் வேண்டியுள்ளது.