Descriptions
பரீட்சைகள் ஆணையாளராகக் கடமையாற்றிய புஷ்பகுமார பதவியில் இருந்து நீக்கப்பட்டு சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சனத் பூஜித தேசிய கல்வி நிறுவகத்தின் பரீட்சைகள் பணிப்பாளராகக் கடமையாற்றி மிக அண்மையில் மீண்டும் கல்வி அமைச்சுக்கு இணைக்கப்பட்டிருந்தார். அத்தோடு தேசிய கல்வி நிறுவகத்தில் கடமையாற்ற முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக (நிர்வாகம்) கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய கல்வி அமைச்சின் செயலாளர் இந்த இடமாற்றங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்கொண்டுள்ளார்.