Descriptions
நாவலப்பிட்டி - ஹயின்போட் என்ற இடத்தில் பல்லின தொழில்நுட்ப நிறுவனத்திற்கான கட்டுமானப் பணிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று ஆரம்பமானது.
இதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு என்.வி.கியு தரத்திலான 3 வருட கால கற்கைநெறி மேற்கொள்ளப்பட உள்ளது.
மத்திய மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இந்த நிலையத்தில் கற்கை நெறிகளைத் தொடர முடியும். இதற்கான கட்டத்தின் இரண்டாம் கட்டப் பணியில் முழுமையான கற்கை நெறியை தொடர்வதற்காக தங்குமிட வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.
(source -news.lk)
(source -news.lk)