வைத்திய பீட மாணவர்களை வகுப்புகளுக்கு வருமாறு பீடாதிபதிகள் அழைப்பு
Not allow reviews
Descriptions
அரச பல்கலைக்கழகங்களின் வைத்திய பீட மாணவர்களை வகுப்புகளுக்கு வருகை தந்து விரிவுரைகளில் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக உபவேந்தர்களின் சங்கமும் வைத்திய பீட விரிவுரையாளர்கள் சங்கமும் கோரிக்ககை விடுத்துள்ளன.
சைட்டம் பிரச்சினைக்கு அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை வழங்கியுள்ளதால் போராட்டங்களைக் கைவிட்டுவிட்டு வகுப்புகளுக்கு வருகை தருமாறு உபவேந்தர்களின் சங்கத்தின் செயலாளர் உபவேந்தர் பேராசிரியர் ரன்ஞித் கோரிக்கை விடுத்துள்ளார்.
சைட்டம் பிரச்சினைக்கு அரசாங்கம் ஒரு தீர்வை வழங்கியுள்ளது. தீர்வு தொடர்பில் பிரச்சினைகள் இருப்பின் கற்றல் நடவடிக்கைகளில் கலந்து கொண்டே அவற்றைத் தீர்த்துக் கொள்ளுமாறு வைத்திய பீட விரிவுரையாளர்கள் சங்கம் கோரியுள்ளது.
சைட்டம் பிரச்சினைக்கு நூற்றுக்கு நூறு வீதம் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என தாமும் ஏற்றுக் கொள்வதாக சங்கதின் உறுப்பினர் ரஜரட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட விரிவுரையாளர் பேராசிரியர் வைத்தியர் சன்ன ஜயசுன தெரிவித்தார்.
எனினும் இக்கோரிக்கைகளை மாணவர் அமைப்புக்கள் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.