சாதாரண தர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை
Not allow reviews
Descriptions
இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை துரிதகெதியில் வழங்குதற்காக எதிர்வரும் 25 ஆம் திகதி விசேட ஒருநாள் சேவையை முன்னெடுக்க உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்தினத்தில் பாடசாலை மாணவர்கள் கட்டாயம் வரவேண்டியதில்லை என்று தெரிவித்த அவர் மாணவர்களின் நெருங்கிய உறவினர்கள் என உறுதிப்படுத்திய வேறு நபர்கள் வருகை தருவது போதுமானது என்றும் தெரிவித்தார். அவ்வாறு உறவினர்களாக வருபவர்கள் தாம் குறிப்பிட்ட மாணவரின் உறவினர் என்பதை உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றை கிராம சேவை அதிகாரியிடமிருந்து பெற்றுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.