Descriptions
கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தும் கஸ்ட மற்றும் அதிகஸ்டப் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு சோடி சப்பாத்துக்கள் வழங்கும் திட்டத்தை முன்னரை விட சிறப்பாக மேற்கொள்ளும்பொருட்டு சப்பாத்துக்களை கொள்வனவு செய்வதற்கான அன்பளிப்பு வவுசர்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு முன்வைத்த பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இதற்கேற்ப, ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் 1200 -1500 வரையான பெறுமதி கொண்ட சப்பாத்துக்களை கொள்வனவு செய்வதற்கான வவுசர்களை வழங்கப்படவுள்ளது.
இதற்காக 80827 மில்லியன் ரூபாய்களைச் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டில் 621941 மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை அதற்காக 592.2 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
தெரிவுசெய்யப்பட்ட வழங்குனர்கள் மாணவர்களின் பாதங்களின் அளவை கணித்து அதற்கு பொருத்தமாக பாதணிகளை வடிவமைத்து பாடசாலைகளுக்கு கொண்டுசென்று வழங்கினார்கள்.
எனினும் இச்செயன்முறைக்காக சுமார் 6 மாதக் காலப்பகுதி செலவாகியது. ஒரேநேரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பாதணிகளை வழங்குவதும் சிரம்மானதாகும்.
எனவே, இவ்வருடம் அன்பளிப்பு வ்வுசர்களை வழங்கி சிரமங்களைத் தவிர்ப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.