Descriptions
கிழக்கு மாகாணப் பட்டதாரிகளக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அநீதிகள் இழைக்க்பட்டமையைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளையும் ஆசிரியர் நியமனத்தில் உள்ளீர்ப்புச் செய்யுமாறும் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் அலுவலகம் முன்னால் தாம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த உள்ளதாக அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
மாவட்ட அடிப்படையில் பரீட்சை பெறுபேறுகளை வெளிட்டமை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது. இருபாடாங்களிலும் சராசரி 40 புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு அதில் கிடைக்கப்பெறும் மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என கிழக்கு மாகாண வர்த்தமாணி அறிவித்தலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே இழைக்கப்பட்ட அநீதிகளைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டம் பெற்ற ஆண்டு மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்படல் வேண்டும் என்று கோரி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தில் செயலாளர் மேலும் தெரிவித்தார்.