ஆங்கில டிப்ளோமாதாரிகள் நியமனம் - பாதிக்கப்பட்டவர்கள் ஆளுனருடன் சந்திப்பு
Not allow reviews
Descriptions
கிழக்கு மாகாண ஆசிரியர் உள்ளீர்ப்பின் போது தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில டிப்ளோமாதாரிகளின் குழுவென்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம யை திருகோணமலை ஆளுனர் செயலகத்தில் சந்திப்பை மேற்கொண்டு கலந்துரையாடியுள்ளனர்.
நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் சுமார் 272 பேர் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அனைத்துத் தகுதிகளும் இருந்தும் 120 பேர் நியமனத்திற்கு தெரிவு செய்யப்படாமையினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு நியாயத்தைப் பெற்றுத் தருமாறும் ஆங்கில டிப்ளோமாதாரிகள் ஆளுனரிடம் கோரியுள்ளனர்.