Descriptions
க.பொ.த சாதாரண தர விஞ்ஞானப் பாட வினாத்தாள் முதல் இலங்கை கல்வி நிர்வாக சேலையில் 2017 ஆம் ஆண்டிற்கான பரீட்சை வினாக்கள் வெளிநபரொருவரின் புத்தகமொன்றிலிருந்து பெறப்பட்டது வரை பல்வேறு பிரச்சினைகள் பரீட்சைகள் திணைக்களத்தில் பதிவாகியுள்ளன. இவற்றின் போது பரீட்சைகள் திணைக்களம் தற்காலிக பரிகார முறைகளைக் கடைப்பிடித்தது. ஆனால் இவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை மேற்கொள்ளவில்லை. எனவே பரீட்சைகள் திணைக்களத்தினுள் என்ன நடைபெறுகிறது என்ற உண்மையை கல்வி அமைச்சு வெளியிட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரியுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சர் நியமித்த குழுவின் பரிச்துரைகளின் அடிப்படையில் உதவி ஆணையாளர் மற்றும் முன்னர் கடமையாற்றிய பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார மற்றும் சிலர் பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எனவே இதன் பின்னணியில் என்ன நடைபெற்றது என்று நாட்டு மக்களுக்கு தௌிவுபடுத்த வேண்டும் என்பதோடு தொடர்புடையவர்கள் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதோடு பரீட்சைகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் வலிமை பெறும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.