கல்வித் துறையில் டிஜிற்றல் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பு - நரேந்திர மோடி
Not allow reviews
Descriptions
கல்வித் துறையில் டிஜிற்றல் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியப் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்திலுள்ள இந்தியப் பிரதமரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்வித் துறையில் மேற்கொள்ளவிருக்கும் டிஜிற்றல் மறுசீரமைப்புக்களுககாக இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும். சகல பாடசாலை மாணவர்களுக்கும் டப் கணனியை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டத்தை அமுற்படுத்தவும் இதற்குத் தேவையான தமிழ், சிங்கள மொழிகளிலான மென்பொருட்களை உருவாக்கவும் இதற்கான தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தைத் தயாரிக்கவும் தமது நாடு உதவும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இதன் போது அறிவித்துள்ளார்.
வலுசக்தி, உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பின்பற்றப்பட வேண்டிய வேலைத்தி;ட்டங்கள் பற்றியும் இருதரைவர்களும் கவனம் செலுதினர்.
இந்து சமுத்திரத்தை சமாதான வலையமாக முன்னெடுத்துச் செல்லவும் சுதந்திரமான முறையில் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வது குறித்தும்; ஆராயப்பட்டுள்ளது. இருநாடுகளும் இணைந்து நடைமுறைப்படுத்தவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக அமுற்படுத்துவது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை - இந்திய கூட்டு செயற்றிட்டத்தை துரிதமாக அமுற்படுத்தத் தயார் என்று நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றும் சேவைகளை இந்தியப் பிரதமர் பாராட்டிப் பேசினார்.
இலங்கையின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சிறு மற்றும் குறு தொழில் உள்ளிட்ட துறைகளின் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 2.63 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி வரைவு அமைக்கப்பட்டு அதில் இதுவரை 458 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது என்று இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதுடன் முன்னதாக, இன்று காலை புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்த 5 ஆவது உலக இணையவெளி கருத்தரங்கிலும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கலந்து கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
(news.lk)
(news.lk)