Descriptions
பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் ஒருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியினால் அரச சேவைகள் ஆணைக்குழவின் அங்கீகாரத்துதுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரகசிய மற்றும் நிறுவன பரீட்சைகள் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு பதவிநீக்கப்பட்டுள்ளார்
பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றாமை மற்றும் தவறான நடத்தை போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக இவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணகை்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற பரீட்சைகள், விடைத்தாள் மதிப்பீடு, வினாப் பத்திரம் தயாரித்தல், வினாப் பத்திரம் தயாரிக்கும் குழுவை நியமித்தல், பரீட்சை தொடர்பான இரகசியத்தைப் பாதுகாத்தல் முதலான அம்சங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கான ஒரு குழுவை கல்வி அமைச்சர் விசேடமாக நியமித்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.