Descriptions
கல்விப்பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்பரீட்சை நடவடிக்கைகளைக் கண்காணிக்க விசேட நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் மத்திய நிலையங்களில் முறைகேடுகள் எதற்கும் அனுமதியளிக்கப் போவதில்லை எனத் தெரித்த சனத் பூஜித, ஒரு வகுப்பில் 20 பரீட்சார்த்திகளுக்கு மாத்திரமே இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பரட்சாரத்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.