Descriptions
தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் கல்விமாணி பட்டக் கற்கை நெறிக்கு போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான பாடநெறியின் ஆரமம்ப வைபவம் நவம்பர் 22 ஆம் திகதி காலை 9 மணிக்கு தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.
பிராந்திய நிலையங்களிலும் இவ்வாறான ஆரம்ப வைபவங்கள் இம்மாதம் இறுதிப்பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மனைப் பொருளியல் விசேட கலைமாணிப் பட்டப் பாடநெறி மற்றும் இதர சில விசேட பாடநெறிகளுக்கு ஜனவரி மாதமளவில் ஆரம்ப வைபவத்தை நடாத்த தேசிய கல்வி நிறுவகம் உத்தேசித்துள்ளது.