இரகசியம் மற்றும் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் பரீட்சைகள் திணைக்களம் நவீனமயப்படுத்தப்படும் - புதிய பரீட்சைகள் ஆணையாளர்
Not allow reviews
Descriptions
இரகசியம் பேணல் மற்றும் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் பரீட்சைகள் திணைக்களம் நவீனமயப்படுத்தப்படும் என புதிய பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
பரீட்சைகள் ஆணையாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவத்தார்
தற்போது Z யுகத்தில் வாழ்கிறோம். ஆனால் இலங்கை இன்னமும் X யுகத்திலேயே இருக்கின்றது என்று தெரிவித்த சனத் பூஜித Z யுகத்திற்கு பொருத்தமான வகையில் மாறிக்கொள்வது கட்டாயமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பரீட்சைகள் திணைக்களத்தை நவீனமயமாக்கல்
பரீட்சைகள் திணைக்களத்தை நவீனமப்படுத்தும் செயன்முறை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கல்வ ிஅமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் பத்தோடு திணைக்களம் முன் வைத்துள்ள பரிந்துரைகள் நான்கையும் சேர்த்து பரீட்சைகள் திணைக்களத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவத்தார்.
கல்வி அமைச்சரும் செயலாளரும் பரீட்சைகள் திணைக்களம் சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது ஆரோக்கியமான தொன்று என்றும் தெரிவித்தார்.
அனைத்துப் பரீட்சைகளுக்கும் ஒரே சுட்டெண்
தரம் ஜந்தில் நடைபெறும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கு வழங்கும் சுட்டெண்ணை தொடர்ந்து அனைத்துப் பரீட்சைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறித்த நபர் அனைத்துப் பரீட்சைகளையும் ஒரே சுட்டெண்ணில் எழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வார். இதற்கான முயற்சிகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுவரும் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தின் எட்டாவது ஆணையாளர் நாயகமாக பதவி ஏற்ற பீ. சனத் பூஜித தெரிவித்தார்.