இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகத்தினை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விருத்தி செய்தல்
Not allow reviews
Descriptions
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகத்தை நவீன தொழிநுட்பத்தின் அடிப்படையில் விருத்தி செய்வதற்கான பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தி இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகத்தினை நவீனமயப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2.9 அமெரிக்க டொலர் மில்லியன்களுக்கும் 15 மில்லியன் வரியற்ற ரூபா மதிப்பீட்டு தொகைக்கும் M/s Metropolitan Office (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை முடிவுகள் அறிக்கை தெரிவிக்கின்றது.