Descriptions
பரீட்சைகள் ஆணையாளர் W.M.N.J. புஷ்பகுமார உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அவர் கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத்தெரிய வருகிறது.
கடந்த வாரம் பிரதி ஆணையாளர் ஒருவர் சேவை நிறுத்தம் செய்யப்பட்டு விசேட குழு ஒன்று பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை ஆராய நியமிக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றுள்ள இந்த இடமாற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதற்கான காரணங்கள் தொடர்பான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.