Descriptions
ஊவா மாகாணப் பாடசாலைகளில் இறுதித் தவணைக்கான இஸ்லாம் வினாப் பத்திரம் பல்வேறு குழறுபடிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 20 திகதி இப்பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இந்த வினாப் பத்திரம் சதாரணமாக 40 பல்தேர்வு வினாக்களை முதலாவது பகுதியில் கொண்டிருக்கும் அதேவேளை இரண்டாம் பகுதியில் முதலாவது கட்டாயக் கேள்வியோடு மேலதிக நான்கு வினாக்களைக் கொண்டிருக்கும்.
ஆனால் இந்த அமைப்புக்கு மாற்றமாக பல்தேர்வு வினாக்களுக்குப் பதிலாக 20 சுருக்க விடைக்கான வினாக்கள் வழங்கப்பட்டிருந்தது.
இரண்டாம் பகுதியில் ஐந்து வினாக்கள் வழங்கப்பட்டிருந்தன. பகுதி ஒன்றுக்கும் பகுதி இரண்டிற்கும் சேர்த்து 70 புள்ளிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மீதி 30 புள்ளிகளுக்கான பிரயோகப் பரீட்சை நடாத்தப்படும் எனத் தெரியவிக்கப்பட்டிருந்தது.