Descriptions
மிகக் குறைந்தளவு மாணவர்களைக் கொண்ட மிகக் கஸ்டப் பிரதேசத்திலுள்ள தரம் 6-11 வரை வகுப்புக்களைக் கொண்ட 3000 பாடசாலைகளுக்கு விஞ்ஞானப் பரிசோதனைச் சாதனத் தொகுதிகள் வினியோகிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குத் தேவைப்படும் ரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் கருவிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளதோடு இவற்றை மிகச் சுலபமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சு இச் செயற்றிட்டத்திற்கு 450பில்லியன் ரூபாய்களைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது.
மேல் மாகாகணத்தில் 448 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 440 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் 306 பாடசாலைகளும் வடக்கில் 246 பாடசாலைகளும் கிழக்கில் 322 பாடசாலைகளும் வடமேல் மாகாணத்தில் 403 பாடசாலைகளும் வடமத்திய மாகாணத்தில் 173 பாடசாலைகளும் ஊவ மாகாணத்தில் 249 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 410 பாடசாலைகளும் இவ்வாறு விஞ்ஞான பரிசோதனை உபகரணத் தொகுதியைப் பெறவுள்ளன.