உயர்தர தொழில் கற்கை நெறிக்கு 2100 ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ள நடவடிக்கை
Not allow reviews
Descriptions
இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ள தரம் 13 வரையிலான கட்டாயக்கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர்தர தொழில் கற்கை நெறிக்காக பட்டதாரி ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்வுள்ளனர்.
க.பொ.த சாதாரண தரத்தில் போதுமானளவு புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்கான விசேட தொழில்கற்கை நெறி உயர் தரப் பரீட்சைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் பரீட்சார்த்தமாக 42 பாடசாலைகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் புதிய உயர்தர கல்வி கற்கை நெறிக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆசிரியர்களுக்கான வெற்றிடத்திற்காக இலங்கை ஆசிரியர் சேவையில் 3 – 1 அ தரத்திற்கு பட்டதாரிகள் 2100 பேர் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
இது தொடர்பான வர்த்தமானி கடந்த வௌ்ளிக்கிழமை வௌியிடப்பட்டுள்ளது.
இந்நியமனங்களுக்குத் தகுதியானவர்கள் போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.
2017.12.11 க்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றின் பட்டச்சான்றிதழ் பெற்றுக்கொண்டுள்ளதோடு விண்ணப்பிக்கும் பாடத்தினை பல்கலைக்கழகப் பட்டத்திற்கான பாடநெறியில் கற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
26 பாடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விபரங்களையும் மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் பின்வரும் இணைப்பில் சென்று பெற்றுக் கொள்ள முடியும்