Descriptions
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவபீடத்தின் 2018 புகுமுக புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இம்மாணவர்களின் பதிவனை அடுத்து நவம்பர் 21, 22, 23, திகதிகளில் மாணவர்களின் திசைமுகப்படுத்தல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து விடுமுறையின் பின் எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி ஆங்கில பாட கற்கைநெறியும் ஜனவரி 08 தொடக்கம் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கபடவுள்ளன என முகாமைத்துவ பீட நிர்வாகம் ஊடகங்களுக்கான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(thinakaran)