பாடசாலை சீருடை வவுச்சர்கள் எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகம்
Not allow reviews
Descriptions
2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை வவுச்சர்களை அடுத்த மாதம் இரண்டாம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுச்சர்களை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
உரிய வகையில் வவுச்சர்களை விநியோக்கும் நடைமுறைகள் தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை அதிபர்களுக்கு தௌிவுப்படுத்தப்படவுள்ளது.
பாடசாலை சீருடைக்குப் பதிலாக வவுச்சர்கள் வழங்கி சீருடை பெற்றுக் கொள்ளும் ஒழுங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.