Descriptions
தரம் 7 புவியியல் பாடநூல் சின்தடிக் வகை கடதாசியினால் அச்சிடப்பட்டமையினால் அரசாங்கத்திற்கு ரூபா 15 கோடி நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இப்பாடநூலை சின்தடிக் வகை கடதாசியில் அச்சிடுவதற்கான முடிவெடுப்பதற்கு முன்னர் அதுதொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்க வில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சங்கத்தின்செயலாளர் திரு ஸ்டாலின் 22 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
இந்த கடதாசியில் தயாரிக்கப்பட்ட நூலைப் பயன்படுத்துவதனால் மாணவர்களுக்கு கண், சரும, மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகம் அறிக்கை வெ ளியிட்டுள்ளது. இதன் காரணமாக இவற்றை பாவணையில் இருந்து அகற்றவேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தரம் 7 புவியியல் பாட நூலை சின்தடிக் கடதாசியில் அச்சிடுவதற்கு கல்வி அமைச்சர் 2016 ஜூலை 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதற்கு நிதியமைச்சர் இது தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டதாக அறிய முடிகிறது. எனினும் அவ்வாறான ஆய்வறிக்கையை கல்வி அமைச்சு சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதியின் வேண்டுதலின் பேரில் ஜனாதிபதி விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற் கொண்டது. இதன் பின்னர் கல்வி அமைச்சர் உயர் அதிகாரிகள் இருவரை குற்றவாளியாக்கிவிட்டு பரிந்துரைகள் எதனையும் நடைமுறைப்படுத்தாது விட்டுவிட்டார்.
இதன் மூலம் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை உரியவர்களிடமிருந்து அறவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.