கிழக்கு மாகாணத்தில் 1442 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமன கடிதங்கள் எதிர்வரும் சனிமற்றும் ஞாயிறு தினங்களில் திருமலையிலும் மட்டக்களப்பிலும் வைத்து வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கல் தொடர்பான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதான மண்டத்தில் வைத்து பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமன கடிதங்கள் சனிக்கிழமை வழங்கப்படவுள்ளன.
அதேபோன்று. மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் வைத்து வழங்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுனரிடம் கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் இ.திசாந்தனினால் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பில் நேற்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Metro)