Descriptions
அரச சேவைக்கான ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வழிமுறையாக போட்டிப் பரீட்சையை மாத்திரம் கொண்டிருக்கும் வகையில் அமைந்த தேசிய கொள்கை ஒன்றைத் தயாரிக்குமாறு கல்வி மற்றும் கல்வி சார் சேவை சங்கம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2006 அரச நிர்வாக சுற்றுநிருபத்தினால் பாதிக்கப்பட்ட முதலாவது தரத்தை உடைய அதிகாரிகள் இழந்த பதவிஉயர்வை மீண்டும் வழங்கி கௌவரவத்தைக் காப்பாற்றுமாறும் இச்சங்கம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நூற்றுக்கு ஏழு வட்டிவீதத்தை நீக்கிவிட்டு அரச ஊழியர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தருமாறும் அரச மொழிகள் திணைக்களம் நடாத்தும் 100 மணித்தியால பாடநெறியில் நிபுனத்துவ சான்றிதழ் பெறுவதிலருந்து இரண்டாம் மொழியை விடுவிக்குமாறும் இச்சங்கம் கோரிக்கைகளை முன்வைத்து நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணை தொடர்பான கருத்துக்களை முன்வைக்குமாறு நிதி அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு பதிலாகவே இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.