யாழ். தென்மராட்சியில் இரு வருடங்களில் புதிய தொழில் பயிற்சி கல்லூரி
Not allow reviews
Descriptions
யாழ் மாவட்டத்தில் மீசாலை வடக்கு, தென்மராட்சி பிரதேசத்தில், புதிய தொழிற் பயிற்சி கல்லூரியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதில் கல்வி பயிலும் பொருட்டு வருடாந்தம் சுமார் 8,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்ற போதிலும், யாழ். தொழில்நுட்ப கல்லூரியில் 1,500 பேருக்கு மாத்திரமே தொழில்பயிற்சிகளை பெறும் வசதிகள் காணப்படுகின்றன.
இந்நிலைமையினை கவனத்திற் கொண்டு, யாழ் மாவட்டத்தில் மீசாலை வடக்கு, தென்மராட்சி பிரதேசத்தில், புதிய தொழிற் பயிற்சி கல்லூரியொன்றை நிர்மாணிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதோடு, தேசிய தொழில் தகைமை (NVQ) 3, 4 மட்டத்திலான தொழில் பயிற்சிகள் பலவற்றை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூபா 560 மில்லியன் உத்தேச செலவில் அடுத்த இரு வருடத்துக்குள் அக்கல்லூரியை நிர்மாணிப்பதற்கு, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நன்றி தினகரன்