Descriptions
ஆசிரியர்கள் தொடர்பான தகவல்களை கல்வி அமைச்சுக்கு வழங்காத அதிபர்களை அழைத்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடமாற்றம் பெறாமல் இருப்பதற்கு எந்த ஆசிரியருக்கும் உரிமையில்லை என்றும் தேசிய மாகாண பாடசாலைகள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியூறுத்தினார்.
இலங்கை ஆசிரியர் சங்க தலைமைக் காரியாலயத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு அமுல்படுத்திவரும் பத்துவருடங்களுக்கு அதிகமான காலப்பகுதியில் ஒரே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யூம் செயற்றிட்டத்தின் போது ஆசிரியர்கள் சிலர் பாடசாலையின் ஏனையவர்களோடு இணைந்து இடமாற்றங்களை ரத்துச் செய்ய போராடிவருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஜோஸப் ஸ்டாலின் அவ்வாறான ஆசிரியர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டார்.