Descriptions
2014/2016 ஆம் ஆண்டுகளில் கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 3645 பேர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்படவுள்ளது. நியமனங்களை வழங்கும் நிகழ்வுக்கான அழைப்புக் கடிதங்களை கல்வி அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.
பாடசாலைகளைத் தேர்வு செய்வதற்கான அறிவுறுத்தல் கூட்டமும் அமர்வும் கடந்த 10 ஆம் திகதி மகரகம தேசிய கல்வியியல் கல்லூரியல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. நியமனம் வழங்கும் வைபவம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ.எஸ். ராதாகிரிஷ்ணன் ஆகியோரின் பங்குபற்றுதலோடு பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.